GATPS Centennial Celebration
கடந்த நூறு ஆண்டுகளாக நம் மூணாறு மண்ணிற்கும், நம் தாய் மொழி தமிழுக்கும் பெருமை சேர்த்து கொண்டிருக்கக் கூடிய பழைய மூணாறில் செயல்பட்டுவரும் அரசு ஆங்கிலோ தமிழ் ஆரம்ப பாடசாலை (GATPS ) வருகின்ற 2022 மார்ச் மாதத்தில் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. நமது KDH வளர்ச்சி மையம் அந்த விழாவினை சிறப்பிக்க எல்லா விதத்திலும் உதவி செய்ய தயாராக இருக்கிறது என்பதை இத்தருணத்தில் தெரியப்படுத்தி கொள்கிறோம். நமது மூணாறில் இது போன்ற மேலும் பல பள்ளிகள் இன்றளவிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருவது நமக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அபூர்வமான நூற்றாண்டு விழாவில் நாம் நமது பங்களிப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல் நம் மண்ணிற்கு செய்ய வேண்டிய கடமைகளில் மிக முக்கியமான ஒன்று என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நம் மண்ணில் இதுபோன்ற ஒரு நூற்றாண்டு விழா நடப்பதை நம் பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரிய படுத்த வேண்டும். விழா சிறப்பாக நடைபெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று KDH வளர்ச்சி மையம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் தொடர்புக்கு
+91 94479 18951
(தலைமை ஆசிரியர்)
www.gatpsmunnar.in
நன்றி
KDH Development and Welfare Society (KDH வளர்ச்சி மையம்)
www.kdhdws.org
Whatsapp: 8547115832
Releted Posts
General Body Meeting
Dear KDHDWS Society Member, The KDH Development and Welfare Society is delighted to invite you to .....
Read moreInsight PSC Tamil / KTET / KGTE / Spoken English / Vidhai Clads- 2024 - 25 (KDHDWS)
மூணாறில் PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool .....
Read more