Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் நிறுவப்பட்ட நமது KDH வளர்ச்சி மையம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் ஒன்றை நாளை 9 ம் தேதி(09 Dec 2023) மூணாறு கிரீன் ரிட்ஜ் ரிசோர்ட் கான்ஃபரன்ஸ் ஹாலில் வைத்து DICCI (Dalit Indian Chamber of Commerce and industry) அமைப்புடன் இணைந்து நடத்த தீர்மானித்துள்ளது.
DICCI (Dalit Indian Chamber of Commerce and industry) எனும் அரசு அமைப்பு இந்திய அளவில் SC / ST பிரிவு மக்களில் தொழில் முனை வோர் மற்றும் சுய தொழில் செய்வோருக்கு உதவிகரமாக இருந்து வருகிறது.
கல்வி மட்டுமல்லாது தொழில் வளர்ச்சியும் ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும். நமது மூணாறின் வளர்ச்சிக்கு கல்வி மட்டுமல்ல தொழில் செய்வதும் மிகவும் அவசியம். KDH வளர்ச்சி மையம் அதற்கான பல நிகழ்வுகளை முன்னெடுத்து நடத்தி வருகிறது.
ஏற்கனவே தொழில் நடத்துபவர்கள் புதியதாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள், நல்ல வழிகாட்டல் இல்லாமல் தொழில் தொடங்க முடியாமல் போனவர்களுக்கும் இந்த கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். தொழிலை தொடங்குவது மட்டுமல்லாது அதை எவ்வாறு நன்முறையில் நடத்துவது, கடன் வசதி பெறுவது எப்படி போன்றவை குறித்தும் இந்த கருத்தரங்கின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
*மதிய உணவுடன் கலந்துரையாடல் நடைபெறும்.*
*நேரம்: நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை.*
*இடம் : கிரீன் ரீட்ஜ் ஹால், பழைய மூணாறு, ஷிக் ஷாக் அருகில், GATPS பள்ளி முன்புறம்.*
அன்று பங்கெடுக்க ஆர்வம் உள்ளவர்கள் கீழ் உள்ள Google Form இல் உங்கள் விவரங்களை பதிவிடவும்.
Google form ரிஜிஸ்டர் செய்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்-
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்"
Google form link:
நன்றி
KDH வளர்ச்சி மையம்
(KDH development and welfare society)
8547115832



Releted Posts

kdhdws

General Body Meeting

  •        August 16, 2024

Dear KDHDWS Society Member, The KDH Development and Welfare Society is delighted to invite you to .....

Read more
kdhdws

Insight PSC Tamil / KTET / KGTE / Spoken English / Vidhai Clads- 2024 - 25 (KDHDWS)

  •        July 03, 2024

மூணாறில் PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more