Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்


நம்முடைய *KDH வளர்ச்சி மையத்தின்* கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்காக செயல்படும் *Insight Institutions PSC(தமிழ் வழி)* குழு சார்பாக வருகின்ற 2024 வருடம் நடக்க இருக்கும் *LDC/ 10th Level Preliminary 2024* தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் 2023 நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் கேரள அரசின் வேலை வாய்ப்பு துறையுடன் இணைந்து நமது வளர்ச்சி மையம் நடத்த இருக்கும் *PSC சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் / நேரடி வகுப்பு வழியாக நடத்த தீர்மானிக்கபட்டுள்ளது*.

இந்த வகுப்புகள் அனுபவமிக்க சிறந்த ஆசிரியர்களால் நடத்தப்படும். அது மட்டுமல்லாது தற்போது நடக்கும் கேரளா PSC யின் புதிய முறை தேர்விற்கான (Statement, Reason Question) அனைத்து வழிமுறைகளும் சொல்லித்தருவதோடு PSC தேர்வு குறித்த அனைத்து சந்தேகங்களும் உங்களுக்கு எளிய முறையில் தீர்த்து தரப்படும்.

இதில் பங்கு பெற்று அனைத்து வகுப்புகளிலும் தவறாமல் பங்கு பெறுவேன் என்றும் நல்ல முறையில் படிப்பேன் என்ற *ஆர்வமும் உள்ளவர்கள் *மட்டும்* கீழ் உள்ள இணைப்பில் (Link ) தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்யவும்*.

*நேரம் மற்றும் பிற விவரங்கள் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்படும்.*


*நமது KDH வளர்ச்சி மையத்தின்* தொழிற்கல்வி குழுவின் (Technical Education Team) சார்பாக கேரள அரசின் தட்டச்சு மற்றும் கணினி தேர்விற்கான (KGTE) 4-வது பிரிவாக புதிய பயிற்சி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை KGTE இல் 3 (Batch)பிரிவாக வகுப்புகள் நடத்தப்பட்டு சுமார் 95 க்கு மேற்பட்ட மாணவ /மாணவிகள் கேரள அரசின் தட்டச்சு தேர்வு(KGTE) எழுதி சான்றிதழ் பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

அதில் 2 பிரிவு மாணவ மாணவிகள் *PSC LD Typist* தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். Batch 1 ல் பயிற்சி பெற்ற மாணவ/மாணவிகள் KPSC LD typist தேர்வு சிறந்த முறையில் எழுதியும் அரசு பணிக்காகத் தயாராக உள்ளார்கள்.

இதற்கான *4வது Batch (Malayalam, English and Computer Word processing Lower & Higher Grade)* வகுப்புகள் நடை பெற்று வருகிறது. இந்த வகுப்பில் சேர்ந்து சிறந்த முறையில் பயிற்சி செய்வேன் என்ற ஆர்வம் உள்ளவர்கள் கீழ் கொடுக்கபட்டுள்ள இணைப்பில் தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்யவும்.


*குறிப்பு* : நம்முடைய Insight Institutions PSC Batch 1 இல் படித்த மூணாறை சேர்ந்த
* திருமதி ராதாலட்சுமி,
* திருமதி ஜெயா என்பவர்கள் அவர்கள் கனவை நினைவாக்கி 2021 இல் நடந்த PSC UPSA (Upper Primary School Assistant) பாலக்காடு & வயநாடு தேர்வில் வெற்றி பெற்று முதல் மற்றும் மூன்றாம் தரத்தில் (1st & 3rd rank) வந்துள்ளார்கள் என்பது நம்முடைய Insight Institutions சாதனையின் முதற்படி. மேலும் பலரும் ரேங்க் லிஸ்டில் உள்ளனர்.

*" ஒரு விஷயத்தை உன்னால் கனவு காண முடியுமானால் அதனை உன்னால் செய்து முடிக்கவும் முடியும்"*.

Link:

https://forms.gle/wbGNVTyXmaicPimd8


*நன்றி*
Team Insight PSC Tamil and KGTE Team
KDH Development and Welfare Society (KDH வளர்ச்சி மையம்)
www.kdhdws.org
Whatsapp: 8547115832



Releted Posts

kdhdws

General Body Meeting

  •        August 16, 2024

Dear KDHDWS Society Member, The KDH Development and Welfare Society is delighted to invite you to .....

Read more
kdhdws

Insight PSC Tamil / KTET / KGTE / Spoken English / Vidhai Clads- 2024 - 25 (KDHDWS)

  •        July 03, 2024

மூணாறில் PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool .....

Read more
kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more