நம்முடைய

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நம்முடைய "KDH வளர்ச்சி மையம்" தொடங்கி சரியாக இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.. 2020 செப்டம்பர் ஒன்றாம் தேதி தான் நாம் இந்த WhatsApp குழுவை தொடங்கினோம். கடந்த இரண்டு மாத வேளையில் நடந்த நிகழ்வுகளை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்..

1. KDHDWS (Kannan Devan Hills Development and Welfare Society) என்ற பெயரில் செப்டம்பர் 17 ஆம் தேதி சங்கம் பதிவு ( ரிஜிஸ்டர்) (பதிவு எண்: IDK/TC/236/2020 ) செய்யபட்டு விட்டது.
2. kdhdws.org என்ற இணையதளம் உண்டாக்கி உள்ளோம்.
3. மூணார் SBI வங்கியில் அக்டோபர் தேதி அக்கவுண்ட் தொடங்கி விட்டோம். PAN அட்டையும் கிடைத்து விட்டது.
4. அக்டோபர் 10 தேதி முதல் வரலாற்றில் முதல் முறையாக தமிழ் மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு குறிப்பாக மூணார் பகுதி மாணவர்களுக்கு தமிழ் வழி PSC அரசு வேலை வாய்ப்பு பயிற்சிகள் கேரள அரசின் உதவியுடன் தொடங்கி விட்டோம். இப்போது 200 மூணார் மாணவர்கள் தினமும் மாலை 7. முதல் 9 மணி வரைபயிற்சி பெறுகிறார்கள்
5. கேரள உயர் நீதிமன்றத்தில் இடம் கிடைப்பதற்கு வழக்கு தொடர 92 பக்கமுள்ள ஒரு நகல் WRIT தயார் செய்து வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளோம்.
6. டாடா கம்பனியின் மும்பை தலைமை அலுவலகத்திற்கு email வழி நம்முடைய கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம்.
7. கேரள அரசிடம் கொடுக்க இரண்டு மனு தயார் ஆகி விட்டது. அதன் ஒரு நகல் இன்று அமைச்சர் எம். எம். மணி, MLA எஸ் . ராஜேந்திரன், இடுக்கி மாவட்ட ஆட்சியாளர் என்பவர்களிடம் கொடுக்க பட்டுள்ளது.

அடுத்தது உறுப்பினர்களை சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.. அதற்கான zoom meeting உடன் தொடங்கும்.
நன்றிReleted Posts

kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more
kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more