பெருமையோடு மகிழ்கிறேன்

அனைவருக்கும் என் பணிவார்ந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன் புதியதாக ஒரு மாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த கேடிஹெச் கூட்டமைப்பில் நானும் உறுப்பினராக இணைந்ததை நினைத்து பெருமையோடு மகிழ்கிறேன்.
பல ஆண்டுகளாக எந்த வித முன்னேற்றமும் இல்லாத நம் தாய் மண்ணில் வளர்ச்சி மாற்றம் அல்லது முன்னேற்றம் ஏற்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த அமைப்பிற்கு நான் என்னுடைய முழு ஆதரவையும் தருகிறேன் இதற்காக உழைத்த தோழர்களுக்கு என்னுடைய நன்றிகள் கலந்த வாழ்த்துக்களும் கூட.
ஒரு சமுதாயத்தில் மாற்றம் என்பது அவ்வளவு எளிதாக கிடைக்ககூடிய ஒன்றல்ல அதற்காக பல யுத்திகள் பல உழைப்புக்கள் என்றெல்லாம் உழைக்க வேண்டும் அதுவும் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் வேறுபாடுகள் இல்லாமல் பாகுபாடுகள் இல்லாமல் நம் மண்ணின் மாற்றம் என்கிற ஒற்றை கருத்தில் நாம் அனைவரும் குவியவெண்டும் அப்படி ஒற்றை கருத்தில் நாம் சேரும்பொழுது பொழுது தான் நாம் இன்னும் பலம் பெற முடியும்.இந்த அமைப்பிற்கான செயல்பாடுகள் என்ன இதன் நோக்கம் என்ன என்பதை மிகவும் தெளிவாக மக்களிடம் நாம் எடுத்துச்சொல்ல வேண்டியது மிகவும் அவசியம் அதனால் நாம் அனைவரும் மிகவும் தீவிரமாக வேலை செய்ய வேண்டிய தேவை காலம் நமக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறது.
இந்த அமைப்பை நாம் மிகவும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் தோழர்களே அப்படி சரியாக பயன்படுத்திக்கொண்டால் நம் மக்களின் வாழ்வு அல்லது வாழ்க்கைக்கு தேவை என்னவோ அதை நம்மால் செய்துக்கொடுக்க முடியும் என்பதை நான் நம்புகிறேன்.இத்தனை ஆண்டுகள் இருந்த மக்களுக்கு நாம் ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்காமல் இனிமேல் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை நான் சிந்திக்க வேண்டிய தருணம் இது.இந்த அமைப்பு இன்னும் வலிமை பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்பதை நாம் உறுதியேற்போம்.நல்லதையே நினைப்போம் நல்லதையே பேசுவோம் நல்லதையே செய்வோம்.ஒன்றாக ஒற்றுமையாக.Releted Posts

kdhdws

Insight PSC Tamil / KTET / KGTE / Spoken English / Vidhai Clads- 2024 - 25 (KDHDWS)

  •        July 03, 2024

மூணாறில் PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool .....

Read more
kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more