அவசர அறிவிப்பு

  •        August 04, 2022
Date: 4-8-2022

கடந்த சில நாட்களாக மூணாறு சுற்றுப்பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று வரும் நாட்களில் தொடர்ந்தால் பல விபத்துக்களை சந்திக்க நேரிடும். ஆபத்தானதாக இருக்கும் இந்த நேரத்தில் நாம் வசிக்கும் லயங்களின் *சுற்றுப்பகுதிகளை இடைவெளி விட்டு கண்காணிக்க வேண்டும்*.

நம்முடைய *KDH வளர்ச்சி மையத்தின் Disaster Unit* உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் தவறாமல் தங்கள் பகுதியை கண்காணிக்க வேண்டும்.

வரும் நாட்களில் கனத்த காற்றும் மழைக்கும் வாய்ப்பு இருப்பதால் நாம் மேலும் கவனமாக இருக்க வேண்டும்.

->தங்கள் பகுதி லயங்களில் ஓடுகள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி படுத்தவும். இல்லையென்றால் அதற்கான தீர்வுகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

->நீர் ஊற்றில் தண்ணீர் மண் கலந்து வந்தால் அதன் சுற்றளவில் *நிலச்சரிவு ஏற்பட கூடுதல் வாய்ப்பு* உள்ளது.
*செம்மண் நிறத்தில் கூடுதல் நீர் வந்தால் உடனே பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும்.*
-> *சிறிய கவன குறைவும் பெரிய விபத்தில் கொண்டு சென்று விடும் என்பதை நம் உறவுகளை இழப்பதற்கு முன்பு சிந்தித்து செயல்பட வேண்டும்.**ஏதாவது விபத்து நடந்து தொலை தொடர்பு மற்றும் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலை வந்தால் அருகாமையில் உள்ளவர்களுடன் இணைந்து வெளிச்சம் ஏற்படுத்தும் விதம் பெரிய விறகுகளை வைத்து தீ போட்டு அனைவரையும் பயப்படாமல் ஒரு இடத்தில் கவனமாக வர வைக்கலாம்.*

1. இனி வரும் நாட்களில் மின்சாரம் துண்டிப்பு கூடுதலாக ஏற்படும் என்பதால் மின்சார விளக்கு அல்லாமல் குறைந்தது ஒரு *பழைய பேட்டரி லைட்டை வாங்கி வைக்கவும்*.
நமது பழைய முறைப்படி தீ பந்தங்களை பயன்படுத்த தயார்படுத்தி வைக்கவும்.

2. அருகில் சிறிய விபத்து ஏற்பட்டால் கூட உடனே பொதுவான *ஒரு இடத்தில அனைவரும் சேரும் விதம் தயாராக இருக்க வேண்டும்*.

முடிந்தால் பள்ளிகளில் பயன்படுத்தும் பெல் அல்லது *சத்தம் ஏற்படுத்தும்* டின் போன்றவைகளை பொது இடங்களில் வைக்கவும்.

3. வீட்டில் தேவையான உணவு பொருட்கள் மற்றும் அத்யாவசியமான *மருந்துகளை வாங்கி வைக்கவும்*.
சிறிய அளவிலான முதலுதவி செய்யும் முறைகளை கேட்டு தெரிந்து வைக்கவும்.

4. வீட்டில் உள்ள முக்கிய *ஆவணங்களை* மழை நீரில் இருந்து பாதுகாக்கும் வகையில் தயார் செய்யவும்.

5. அருகில் உள்ள விடுகளில் உள்ளவர்களோடு *தொடர்பில் இருக்க முயற்சிக்கவும்.*

6. வீட்டின் அருகாமையில் பெரிய மரங்கள் இருந்தால் அதன் அருகாமையில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்கவும், ஆபத்தானதாக இருந்தால் வெட்டிவிட முயற்சிக்கவும்.

7. இடி மின்னல் வரும் நேரத்தில் மரங்கள் இருக்கும் பகுதியில் குழந்தகள் செல்வதை தவிர்க்க வேண்டும்.

8. நீர் தேங்கி கிடக்கும் இடங்களில் நடக்கும்போது கவனமாகவும் , வாகனங்களில் செல்லும் பொது மெதுவாகவும் செல்லவும்.

9. மின்கம்பங்கள் அறுந்து கிடந்தாலோ எந்தவொரு காரணம் கொண்டும் கைகளால் தொடாமலும் உறுதி செய்யும் வரை அந்த பகுதிகளுக்கு செல்லாமல் இருப்பது நல்லது.

10. முடிந்தால் வீடுகளில் முன்காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த தீ பந்தங்களை வீட்டில் ஒன்றாவது வைத்து கொள்ளவும்.

11. கைபேசி எப்பொழுதும் முழு சார்ஜில் வைத்துக்கொள்ளவும்.

12. அவசர உதவி எண்களை குறித்து வைத்து கொள்ளவும்.

-> இந்த குழுவில் பயணிக்கும் ஓட்டுனர்கள் குறிப்பாக *ஜீப், ஆபத்து நேரத்தில் பயன்படும் வாகனங்களை ஓட்டும் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.*

->அனைத்து விதமான செய்திகளையும் நாம் மட்டும் இல்லாமல் வீட்டின் அருகில் உள்ள *நன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.*

-> ஏதாவது இடத்தில் விபத்து என்று கேள்வி பட்டால் உடனே *வெளியில் தெரியும் படி செய்யவும். சுய பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் விபத்து பகுதிகளில் உதவி செய்ய அனுபவம் உள்ளவர்களுடன் சேர்ந்து செயல்பட முயற்சிக்கவும்.*

-> முற்றிலுமாக தகவல் தொடர்பு இல்லையென்றால் அவசர அழைப்பிற்காக பயன்படும் உபகரணங்கள் நமது பகுதியில் ஏற்கனவே நமக்காக வழங்க பட்டுள்ளது. அதை *உரிய அனுமதியுடன் பெற்று கொள்ள முயற்சிக்கவும்.*

-> தனியாக வீட்டில் இருப்பவர்களை *இடைவெளி விட்டு அருகாமையில் இருப்பவர்கள் கவனித்து* கொள்ள வேண்டும்.

-> லயங்களில் வசிக்கும் நமக்கு பல நிறை குறைகள் இருந்தாலும் *சூழ்நிலை அறிந்து செயல்பட முயற்சிக்கவும்.*

-> எந்தவொரு செய்தியையும் சிறிதாக எடுத்து கொள்ளாமல் கவனமாக இருக்க முயற்சிக்கவும்.

*"ஒன்றிணைவோம் இழப்புகளை தவிர்ப்போம்"*

நன்றி
KDH வளர்ச்சி மையம்
Disaster Unit.
www.kdhdws.org
WhatsApp: 8547115832

Join our Disaster Group 2
(முதல் குழுவில் உள்ளவர்கள் இதில் இணைய வேண்டாம்Releted Posts

kdhdws

Insight PSC Tamil / KTET / KGTE / Spoken English / Vidhai Clads- 2024 - 25 (KDHDWS)

  •        July 03, 2024

மூணாறில் PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool .....

Read more
kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more