தீ விபத்தில் இருந்து தப்பிக்க
KDH வளர்ச்சி மையத்தின் ஒரு அமைப்பான *Disaster Unit -ன் நாம் எவ்வாறு தீ காயங்களை ஏற்படுத்தக் கூடிய தீ விபத்துக்களை தவிர்க்கலாம் என்பதற்கான ஒரு சிறிய முயற்சி.*
-> லயங்களில் வசிக்கும் நாம் *வெளியில் செல்லும் பொழுது கண்டிப்பாக காஸ் சிலிண்டர் சரியாக அணைத்துள்ளோமா* என்று உறுதிப்படுத்த வேண்டும்.
-> கடவுள் பக்தி என்பது நம் மக்களின் மிகப்பெரிய சக்தியாக இருந்து வருகிறது. இருந்தாலும் சில நேரங்களில் நமது கவனக் குறைவால் அது ஆபத்துகளில் வந்து முடிந்து விடுகிறது.
*விளக்கு என்பது அந்த பூஜை நேரத்திலும் வீட்டில் நாம் இருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அணைத்து வைப்பதே நல்லது*.
பெரிய அளவு கரப்பான் பூச்சி அல்லது எலிகள் தொல்லை லயங்களில் தவிர்க்க முடியாதவை. வீட்டில் இல்லாத நேரத்தில் எறியும் விளக்கினை கீழே தள்ளி விட்டாலும் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-> இரண்டே அறைகளுக்கான இரண்டு சிறிய மின் விளக்கிற்கான மின்சாரம் மட்டுமே கிடைக்கும் விதத்தில் அறை நூற்றாண்டிற்கு (50 ஆண்டுகளுக்கு) முன்னதாக நமது லயங்களின் வீடுகளுக்கு வயரிங் செய்து கொடுக்கபட்டது என்பதும் அதன் காலப் பழக்கமும் நாம் அனைவரும் தெரிந்த ஒன்றே. மாறி வரும் இந்த காலத்தில் நாம் பயன்படுத்தும் டிவி, மிக்சி, கிரைண்டர் மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்களுக்கு, இதனை தாங்கும் சக்தி இருக்குமா என்றால் கண்டிப்பாக இல்லை. ஆதலால் ஒரே நேரத்தில் அனைத்து உபகரணங்களையும் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
*முடிந்த வரை வெளியில் செல்லும் போது மெயின் ஸ்விட்சை அனைத்து செல்வது சிறந்தது.*
-> தீ விபத்து ஏற்பட்டால் முன் கதவை திறக்காமல் மேல் ஓடு அல்லது காற்று குறைவாக உள்ளே செல்லும் பகுதி வழியாக பாதையை அமைத்து உள்ளே செல்வது நல்லது.
முன் கதவின் வழியாக கூடுதல் காற்று செல்லும் போது தீ கூடுதல் ஏறிய வாய்ப்புள்ளது.
சிறிய அளவிலான தீயை அணைக்க சோப்பு கலந்த நீர் அல்லது நனைந்த கம்பிளிகளை பயன்படுத்தலாம்.
நன்றி
KDH வளர்ச்சி மையம்
Disaster Unit.
www.kdhdws.org/membership
WhatsApp: 8547115832
Join our Disaster Group 2
(முதல் குழுவில் உள்ளவர்கள் இதில் இணைய வேண்டாம்
Releted Posts
General Body Meeting
Dear KDHDWS Society Member, The KDH Development and Welfare Society is delighted to invite you to .....
Read moreInsight PSC Tamil / KTET / KGTE / Spoken English / Vidhai Clads- 2024 - 25 (KDHDWS)
மூணாறில் PSC 1️⃣ , KGTE 2️⃣ , KTET 3️⃣ , Navodhaya/ Sainic scool .....
Read more