Functional Malayalam Examination
நமது KDH வளர்ச்சி மையம் சார்பாக கேரளப் பல்கலைக்கழக உதவியுடன் *Dr. ஜெயகிருஷ்ணன்* HoD தமிழ்த்துறை காரிய வட்டம் கேம்பஸ் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக கடந்த 3 மாத கால அளவில் நடத்தி வந்த *மலையாளம் Certificate Course இரண்டாம் Batch 2* (கடந்த வருடம் batch1 வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது) முடிவடைந்த நிலையில் அதன் இறுதி தேர்வானது வரும் *30-7-2021* அன்று மூணாறு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. சுமார் *250* பேர் அடங்கிய வகுப்பில் 180+ மாணவ மாணவிகள் மூணாறு, பகுதியை சார்ந்தவர்கள். அவர்களது பயணச்செலவு மற்றும் இதர செலவினங்களை தவிர்ப்பதற்கும் இன்றைய சூழ்நிலையில் கொரோனா போன்ற நோய் தொற்றின் காரணமாக திருவனந்தபுரம் வரை சென்று தேர்வு எழுதும் வசதி இல்லாமல் இருப்பதாலும் நம்முடைய KDH வளர்ச்சி மையம் எடுத்த முயற்சியின் பலனாக மூணாறிலேயே தேர்வு மையம் அமைக்கபட்டு வகுப்பில் கலந்து கொண்ட அனைவரும் எந்தவொரு சிரமமும் இல்லாமல் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வண்டிப்பெரியார் பகுதியை சார்ந்தவர்களுக்கு நமது *KDH* வளர்ச்சி மையம் மூலமாக *KSRTC* உதவியுடன் சிறப்பு பேருந்து சேவையும் அமைத்து கொடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் 3மாத கால வகுப்பு நடைபெற்ற போதிலும் இன்று நடத்தப்பட இருக்கும் *Cultural Programe* அனைவரையும் ஒரே வகுப்பில் ஒன்றாக நேரடியாக பங்கெடுத்த அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
மலையாள மொழியையும் கற்றுக்கொள்வதன் மூலம் கேரள அரசாங்கத்தில் வேலையில் சேருவதற்கான மனோபலத்தையும், வேலை வாய்ப்பினையும் அதிகரித்துள்ளது என்பதில் ஐயமேதுமில்லை. மேலும்இனிவரும்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் நமது KDH வளர்ச்சி மையம் முன் நின்று செயல்படுத்தும் என்பதை உறுதியளிக்கிறது.
இத்தருணத்தில் இந்த வகுப்பினை நடத்தி தந்த ஆசிரியர்களுக்கும் அதற்கான உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் KDH வளர்ச்சி மையம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.
*"அறிவால் இணைவோம் உலகை வெல்வோம்"*
நன்றி
KDH வளர்ச்சி மையம்
(KDH Development and Welfare Society)
www.kdhdws.org/membership
WhatsApp: 8547115832
Releted Posts
Functional Malayalam Batch 3
நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....
Read moreInsight PSC batch 5 inauguration
Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....
Read more