Career guidance 2022
இன்று நடந்த (25-6-22) SSLC மற்றும் +2 தேர்ச்சி பெற்று மேற்படிப்பு படிக்க விரும்பும் மூணாறு, மறையூர், தேவிகுளம் மற்றும் அனைத்து எஸ்ட்டேட் பகுதியைச் சார்ந்த தமிழ் மாணவர்களுக்கான *வழிகாட்டிப் பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நடத்தப்பட்டது* என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வழிகாட்டி பயிற்சி வகுப்பில் நேரடியாகவும் ஆன்லைன் வழியாகவும் சுமார் 50 ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்று தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
நமது
KDH வளர்ச்சி மையம், மறையூர் அரசு கல்லூரி, பழைய மூணாறு அரசு மேல்நிலைப்பள்ளி, தேவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி, மூணாறு அரசு கலை கல்லூரி மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் இணைந்து இந்த பயிற்சி வகுப்பினை வெற்றிகரமாக நடத்த உதவியாக இருந்தனர்.
*"நல்ல விதைதனை விதைத்து நற்பயிரினை அறுவடை செய்வோம்".*
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Career Guidance 2022 என்ற தனி வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டு மேற்படிப்பு சார்ந்த அனைத்து விதமான செய்திகள் மற்றும் உதவிகள் கிடைக்க வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
*இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*
நன்றி
KDH வளர்ச்சி மையம்
www.kdhdws.org
WhatsApp: 8547115832
IHRD college Marayur
Govt VHSS munnar
Govt HSS Devikulam
Govt College Munnar
Releted Posts
Functional Malayalam Batch 3
நம்முடைய *KDH வளர்ச்சி மையம் (Kdh Development and Welfare .....
Read moreInsight PSC batch 5 inauguration
Insight Batch 5 - TamilKerala PSC Free Coching*அனைவருக்கும் .....
Read more