Dr.Gopika

மூணாறு மண்ணின் மகளுக்கு நமது KDH வளர்ச்சி மையம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெட்டிமுடியின் குட்டி மருத்துவர்.



பெட்டிமுடி பேரிடர் விபத்தில் நமது உறவுகளை இழந்த நாம், உணர்வுகளால் ஒன்றிணைந்து பல விதங்களில் நம்மை முன்னேற்றுவதற்கு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளையும் நாம் ஒவ்வொருவரும் அறிந்த ஒன்றே.

தனது விடா முயற்சியினாலும், கடின உழைப்பினாலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பில் சேர்ந்துள்ளார். இதன் மூலம் நமது மண்ணிற்கு பெருமை சேர்த்த கோபிகா அவர்கள் அனைத்து எஸ்டேட் பகுதி வாழ் மக்களுக்கும், வருங்கால இளம் தலை முறையினருக்கும் மிகச் சிறந்த ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகிறார். அவருக்கு KDH வளர்ச்சி மையம் மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

மூணார் பகுதி மாணவர்களே சற்று சிந்தியுங்கள்......
கோபிகாவைப் போன்று கடின உழைப்பும் விடாமுயற்சியும் மேற்கொண்டு வரும் ஒவ்வொருவரும் இது போன்ற உயர் கல்வி மட்டுமல்லாமல் உயர் பதவிகளையும், சொந்தமான இருப்பிடத்தையும் பெற வேண்டும் என்பதே நமது வளர்ச்சி மையத்தின் தாரக மந்திரம் ஆகும். இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக KDH வளர்ச்சி மையம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருவதையும் நீங்கள் அறிவீர்கள்.

நல்ல கல்வியையும் அரசாங்க வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு
KDH வளர்ச்சி மையம் பல்வேறு பயிற்சிகளையும் கூட அளித்து வருகிறது.
அதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறது.

மாடாக உழைத்து, உடல் ஓடாக தேய்ந்து தனது இரத்தத்தை தேயிலைக்கு நிறமாக கொடுத்து விட்டு உயிருடன் மண்ணில் புதைந்து போன பெட்டி முடி அன்னையின் ஆத்மா கண்டிப்பாக கோபிகாவின் இந்த உயர்வை கண்டு சாந்தி அடையும். "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" எனும் குறள் போல இன்று மூணாறில் உள்ள அனைத்து அன்னையரும் கோபிகாவை பெறாத தாய்களே. அவர்கள் ஒவ்வொருவரும் இத்தருணத்தில் மிகுந்த சந்தோசத்தில்   வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதையும் மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறோம்.

"கல்வி ஒன்றே அடிமைச் சங்கிலியை அறுத்து எறியும் ஆயுதம்"
கல்வி பெறுவோம், கற்பிப்போம், ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றிவாகை சூடுவோம்.


நன்றி
தொடர்பிற்கு
KDH வளர்ச்சி மையம்.



Releted Posts

kdhdws

Dalit Indian chamber of commerce and industry

மூணாறு தேயிலைத் தோட்ட மக்களின் .....

Read more
kdhdws

Insight PSC Tamil 2024

  •        October 26, 2023

அனைவருக்கும் வணக்கம்நம்முடைய *KDH .....

Read more
kdhdws

Prematric Girls Hostel Munnar (Seminar)

மூணாறில் செயல்பட்டு வரும் மகளிர் .....

Read more
kdhdws

KGTE BATCH 4 துவக்கவிழா

*அனைவருக்கும் வணக்கம்*. *03-09-2023* அன்று .....

Read more
kdhdws

Congratulations Saravanan sir

நமது *KDH வளர்ச்சி மையத்தின்* செயற்குழு .....

Read more